Ad Code

Responsive Advertisement

தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப ஏப்.26ல் சான்றிதழ் சரிபார்ப்பு


சென்னை: 'அரசு துறைகளில் காலியாகவுள்ள, 1,609 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப, வரும், 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'குரூப் - 4' பதவியில் அடங்கிய, தட்டச்சர் பணிக்கு, 2005 நவம்பர், 6ல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதில், தேர்வான, 2,005 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. வரும், 26ம் தேதி முதல், மே, 10 வரை, சென்னையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இதில் தேர்வு செய்யப்படுவோர் மூலமாக, காலியாக உள்ள, 1,609 தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement