பெண்ணின் உடல் அழகை வர்ணித்த புத்தகத்தை ஆய்வு செய்ய, நிபுணர்கள் குழு அமைத்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான, உடற்கல்வியில் புத்தகம், 'நியூ சரஸ்வதி ஹவுஸ்' என்ற, நிறுவனம் மூலம்வெளியானது.
அதில், பெண்களின் உடல் அழகு பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. 'மார்பு, இடுப்பு மற்றும் பின்பக்க அளவானது, 36 - 24 - 36 என்ற அங்குலங்களில் இருந்தால், பெண்களுக்கு அழகை தரும். அதனால் தான், உலக அழகி போட்டிகளில், இந்த அளவு பெண்கள் மட்டும்தேர்வாகின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும்எதிர்ப்புகிளம்பியது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பில், 'தனியார் பாட புத்தகங்களை பயன்படுத்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை' என, குறிப்பிடப்பட்டது. சி.பி.எஸ்.இ., அளித்த புகாரில், புதுடில்லி, பிரீத் விஹார் போலீசார், நியூ சரஸ்வதி ஹவுஸ் மற்றும் புத்தக ஆசிரியர், வி.கே.ஷர்மா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரம், சர்ச்சைக்குரிய புத்தகத்தை ஆய்வு செய்ய, நிபுணர் குழுஅமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அளித்துள்ள முதற்கட்ட அறிக்கை:
பெண்களின் உடல் அளவு, அழகு என, பாடத்திட்டத்தில் இல்லாத அம்சங்கள் புத்தகத்தில் உள்ளன; பாடத்திட்டத்தை தாண்டிஆசிரியர்எழுதியுள்ளார்.புத்தக ஆசிரியரும், பதிப்பாளரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை தொடர்பு கொண்டு, சட்ட விரோதமாக, பாடத்திட்டப்படி இல்லாத புத்தகத்தை விற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ.,யின்கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்து விட்டனர்.இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை