Ad Code

Responsive Advertisement

இட ஒதுக்கீடு மீறினால்... பள்ளிகளுக்கு எச்சரிக்கை

மாணவர்கள் சேர்க்கையில், இட ஒதுக்கீடு விதிகளை மீறும்,தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விதிகளின் படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், 30; மிக பிற்படுத்தப்பட்டோர், 20; ஆதிதிராவிடர், 18;பழங்குடியினர், 1 மற்றும் பொது பிரிவுக்கு, 31 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்த விதியை பின்பற்ற, தலைமை ஆசிரியர்கள் தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும். அதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆகஸ்ட், 31க்குள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், இயக்குனரகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement