Ad Code

Responsive Advertisement

ஜூன் வரை வெயில் வாட்டும்; இயல்பை விட அதிகரிக்கும்


சென்னை: 'கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து, மார்ச், 1 முதல் கோடை வெயில் துவங்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் துவக்கம் முதலே வெப்பம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், 40 டிகிரி செல்சியஸ்; சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில், 35 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவானது. ஆனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.

அடுத்து வரும் மாதங்களில், ஜூன் வரை, வெயிலின் அளவு கடுமையாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன், அடுத்த இரு மாதங்களுக்கான முன் கணிப்பையும், இந்திய வானிலை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.


அதன் விபரம்:

* பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில், மேல்மட்ட வெப்ப அளவில், பெரிய மாற்றம் இல்லை. வழக்கமான கோடை வெயிலை விட, ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடுதலாக இருக்கும்

* வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்; தென் மாநிலங்களில், 0.5 டிகிரி செல்சியஸ் அளவு மட்டும், வெப்பம் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement