தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், ஆதார் அட்டை விபரங்களை திருத்தும் பணி நேற்று துவங்கியது.
தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், மாநிலம் முழுவதும்,303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை நிர்வகித்து வருகிறது. ஆதார் எண் பெற்றவர்கள், தங்கள் அட்டையில் உள்ள விபரங்களை, இந்த மையங்களில், திருத்தம் செய்யும் வசதி நேற்று துவங்கியது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண், 'இ - மெயில்' முகவரிஆகியவற்றை திருத்தம் செய்யலாம். புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி போன்றவற்றையும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஐந்து முதல், ௧௫ வயதுடையோர் வரை, கட்டாய கைவிரல் ரேகை மறு பதிவு செய்தல் போன்றவற்றுக்கு கட்டணமில்லை. திருத்தம் செய்ய, புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க, 25 ரூபாய்; ஆதார் விபரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்ள, 10 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் தவறாமல்,ஒப்புகை சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புவோர், கட்டணமில்லாத தொலைபேசி எண், 180042 52911ஐ தொடர்புகொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை