பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் முன்னரே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், கடந்த வாரம் முடிந்தது; மே, 19ல் முடிவுகள் வெளியாகின்றன.
எந்த பாடப் பிரிவுக்கு, எவ்வளவு மதிப்பெண் என்ற விபரத்தை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடும்.அதன்பின், மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பிளஸ் 1 மாணவர்களை சேர்க்க வேண்டும். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில், தனியார் பள்ளிகளில், அதற்குள் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது.
இரு வாரங்களுக்கு முன், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. பல பள்ளிகள், கணிசமாக நன்கொடை பெற்று, பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்த்துள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண்ணுக்கு ஏற்ப, பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம் என, அந்த பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இதில், வசதி படைத்தவர்கள், பள்ளிகள் கேட்ட நன்கொடையை வழங்கி, பாடப்பிரிவுகளையும், 'புக்' செய்துவிட்டனர். பல பள்ளிகள், இணையதளத்தில் வெளிப்படையாகவே, 'அட்மிஷன்' நடத்திய நிலையில், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதனால், 'மெரிட்' அடிப்படையில், பிளஸ் 1சேரலாம் என எதிர்பார்த்திருக்கும் ஏழை மாணவர்களுக்கு,இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை