Ad Code

Responsive Advertisement

'டெட்' தேர்வு நாளை துவக்கம்

'டெட்' எனப்படும், ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு, நாளை துவங்குகிறது; 7.4 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3,000 பேர் இடம் பெற்ற பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில், 18 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

காலை, 10:00 முதல், 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, காலை, 8:30 மணிக்கே வந்து விட வேண்டும். காலை, 9:00 மணிக்கு மேல் வருவோர், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பார்வையற்றவர்களுக்கு, கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்படும். தேர்வு எழுத, உதவிக்கு ஒருவரை அழைத்து வரலாம். மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதியில்லை, கல்வித் துறை பணியாளர்கள் மட்டுமின்றி, போலீசாரும் சோதனையிடுவர் என,
அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement