Ad Code

Responsive Advertisement

'ஸ்மார்ட்' கார்டு வந்தாச்சு : எஸ்.எம்.எஸ்., காணோம்


அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., வராத ரேஷன்கார்டுதாரர்கள், கடைகளில் 'ஸ்மார்ட்' கார்டுகளை வாங்க முடியாமல் அலைகின்றனர். தமிழகத்தில் 'ஸ்மார்ட்' கார்டுகள் ஏப்., 1 முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கார்டு அச்சடிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்டோரின் அலைபேசி எண்ணுக்கு, ஓ.டி.பி., எனும் ரகசிய எண் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப் படும். ஒரு வாரத்திற்குள் அதை ரேஷன் கடைகளில் காண்பித்து, 'ஸ்மார்ட்' கார்டு பெற்று கொள்ளலாம்.தற்போது 20 சதவீதம் 'ஸ்மார்ட் கார்டுகளே ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிலும் பலருக்கு எஸ்.எம்.எஸ்., வரவில்லை. இதனால் அவர்களால் ஸ்மார்ட் கார்டு பெற முடியவில்லை.

வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலைபேசி எண்ணை மாற்றினாலும், பதிவு செய்யாமல் விடுபட்டுஇருந்தாலும் எஸ்.எம்.எஸ்., வராது. உணவு வழங்கல் பிரிவு முழுவதும் கணினிமயமாகி விட்டது. எஸ்.எம்.எஸ்., வராவிட்டால் கம்ப்யூட்டர் மையம் அல்லது 'இ-சேவை' மையங்களை நாட வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement