Ad Code

Responsive Advertisement

சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டியிடம் பெற்றோர் எதிர்பார்ப்பு என்ன?

சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவராக, நீதிபதி மாசிலா மணி பொறுப்பேற்றுள்ள நிலையில், கட்டண விகிதம் முறையாக நிர்ணயிக்கப்படுமா என, பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.


சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டி தலைவராக இருந்த, நீதிபதி சிங்கார வேலுவின் பதவிக்காலம், 2015,டிசம்பரில் முடிந்தது. அதன்பின், சிறப்பு அதிகாரி மனோகரனின் பதவிக் காலமும் முடிந்து, கல்வி கட்டண கமிட்டி மூடப்பட்டது.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளி யானதும், கட்டண கமிட்டியை நிர்வகிக்க, இணை இயக்குனர் ஸ்ரீதேவியும், அவருக்கு பின், இணை இயக்குனர் நரேஷும் நியமிக்கப் பட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இது தொடர்பான பொது நல வழக்கு தாக்கலானது.

இதை விசாரித்த நீதிபதிகள், புதிய தலைவரை நியமிக்க உத்தரவிட்டனர்.ஆனால், அரசு காலதாமதம் செய்தது. இதை, நமது நாளிதழில் மீண்டும் சுட்டி காட்டியதும், புதிய தலைவராக, நீதிபதி மாசிலாமணி நியமிக்கப் பட்டுள் ளார். கமிட்டியின் சிறப்பு அதிகாரியாக, தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற, உதவி செயலர், ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்பார்ப்புகள் என்ன?

கல்வி கட்டண வசூலில், தனியார் பள்ளிகளின் முரண்பாடான நடவடிக்கைகளுக்கு, புதிய கமிட்டி முற்றுப்புள்ளி வைக்குமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.

* தனியார் பள்ளி கட்டணத்தை நிர்ணயிக்கும்போது, மறைமுக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்

* பள்ளிகளில் உள்கட்டமைப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதா, வெறும் புகைப்படம் மட்டும் காட்டப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும்

* கட்டண நிர்ணயத்துக்கு வரும் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையின் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகமும், முறையான அங்கீகாரம் வழங்கியுள்ளதா என ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற வைக்க வேண்டும்

* நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், வசூலிக்கும் கட்டணத்தையும், இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளியும், நிரந்தரமாக வெளியிட வேண்டும் நிர்ணய கட்டணத்தை மீறும்பள்ளிகள் மீதுயாரிடம் புகார் தர வேண்டும்; என்ன நடவடிக்கை எடுக்கப்படும்; கண்காணிக்கும் பொறுப்பு அதிகாரிகள் யார் என்ற விபரங்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.அவ்வாறு செய்தால், கல்வி கட்டணத்துக் காக, பெற்றோர் வட்டிக்கு வாங்கி அவதிப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

* இலவச கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர் களை சேர்த்து, அவர்களிடம் வசூலிக்கப்படும் தொகை, அரசின் மானியம் கிடைத்ததும், மீண்டும் மாணவர்களிடம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை, பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement