Ad Code

Responsive Advertisement

ஜியோ அடுத்த அதிரடி அறிவிப்பு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 120 ஜிபி டேட்டா..!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது.   ரூ. 149 அல்லது அதற்கும் அதிகமாக டேட்டா ரீச்சார்ஜ் செய்தால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை வழங்கி உள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அவர்களுக்கு கூடுதலாக 1 ஜிபி, 5 ஜிபி, 10 ஜிபி பயன்கள் கிடைக்கும். இந்த பலன்களை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியும். ரூ. 149க்கு   கூடுதலாக 2 ஜிபியை பெற முடியும்.


303 ரூபாய் பிளான் மூலம் கூடுதலாக 5 ஜிபியை பெற முடியும். ஏற்கனவே 28 ஜிபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, கூடுதலாக 5 ஜிபி வழங்கப்படுகிறது.

ரூ. 499 மற்றும் அதற்கும் அதிகமான பிளான்கள் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகையுடன் கூடுதலாக 10 ஜிபி வழங்கப்படுகிறது. இந்த 10 ஜிபியை பயன்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே பிரைமில் சேரும் கடைசி தேதியை மார்ச் 30 வரை ஜியோ நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. பிரைமில் இணைந்தோர் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 2.7 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதத்திற்கு 10 ஜிபி என்கிறபோது வருடத்திற்கு 120 ஜிபி இலவசமாக வழங்குகிறது ஜியோ! 

பிரைம் யூஸர் ஆவதற்கு 99ரூபாய் ஒரு முறை கட்டணம் (One time fee) கட்ட வேண்டியிருந்தது. ஆனால், அதையும் இலவசமாக பெற ஜியோவில் ஒரு வழி இருக்கிறது.

பிரைம் யூஸர் கட்டணமான 99 ரூபாயை ஜியோ மணி (Jio Money) மூலம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் தருகிறார்கள். அதன் பின் ஏப்ரல் மாதத்துக்கு 303 ரூ ரீசார்ஜ் செய்தால் அதில் ஒரு 50ரூ கேஷ்பேக் உண்டு. ஆக, இந்த 100 ரூபாய் கேஷ்பேக் மூலம் பிரைம் யூஸர் ஆவதற்கான 99ரூ கட்டணத்தை திரும்ப பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். மகிழ்ச்சி.

அதைத் தாண்டி பல டேட்டா ஆஃபர்களையும் அள்ளி தெளிக்கிறது ஜியோ. மாதம் 149ரூ ப்ரீபெய்ட் பிளானில் இலவச கால்களும், 2 ஜிபி டேட்டாவும் உண்டு என சொல்லியிருந்தார்கள் மார்ச் 31க்குள் 149ரூ ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதாவது 3 ஜிபி டேட்டா 149 மட்டுமே. போலவே, 303 ரூ ரீசார்ஜில் 28 நாட்களுக்கு, தினம் ஒரு ஜிபி என 28ஜிபி டேட்டா கிடைக்கும். புதிய ஆஃபர் படி 28ஜிபி தாண்டி இன்னுமொரு 5 ஜிபி டேட்டாவை தருகிறது ஜியோ. 303 ரூபாய் தாண்டியும் பல ரீசார்ஜ் பேக்குகள் பல 499, 999, 1999 என ஜியோவில் உண்டு. அதில் அதிகபட்சமாக மாதம் 10ஜிபி வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு 120 ஜிபி இலவச டேட்டா. 

இந்த ஆஃபர் எல்லாம் மார்ச் 31க்குள் மட்டும் தான். ஏப்ரல் மாதம் முடிந்தால் அடுத்த மாதம் என்ன செய்வது? இதற்கும் வழி வைத்திருக்கிறது ஜியோ. ப்ரீபெய்ட் என்பதே முன் கூட்டியே கட்டணம் கட்டி வைப்பதுதானே? அதை ஏன் ஒரு மாதத்துக்கு மட்டும் என யோசித்த ஜியோ அதிரடியாக இன்னொன்றை செய்திருக்கிறது. நீங்கள் ஆகஸ்ட் மாதம் அதிக டேட்டா பயன்படுத்தும் தேவை வரும் என நினைக்கறீர்கள். இப்போதே ஆகஸ்ட் மாத பேக்குக்கான கட்டணத்தை கட்டி விடலாம். அந்த மாதம் கூடுதல் டேட்டா உங்களுக்கு கிடைத்துவிடும். திருமண மண்டபத்துக்கு பல மாதங்கள் முன்பே அட்வான்ஸ் தந்து பதிவு செய்கிறோமே.. அது போல ஆஃபரையும் முன்பதிவு செய்யலாம். இது எல்லாம் மார்ச் 31க்குள் செய்துவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

ஜியோவின் ஆஃபர் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் 2016 கடைசி காலாண்டில் பலத்த நட்டத்தை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்தன. பின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களும் ஆஃபர்களை அடுக்கினார்கள். ஆனால், யாருமே தெளிவான ஆஃபர்களை அறிவிக்கவில்லை. செக்மெண்ட்டட் ஆபர் என குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமேயான ஆஃபர்களையே அதிகம் கொண்டு வந்தார்கள். ஜியோவின் இந்த புதிய ஆஃபர்களை சமாளிக்க இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement