Ad Code

Responsive Advertisement

TETல் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்’ அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை கெடு.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 2010ம் ஆண்டு பின் பணியில் சேர்ந்த அரசுபள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற  கல்வித்துறைசுற்றறிக்கை அனுப்பியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


  மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.இதில் அனைத்து வகை பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களேபணியமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 2011ம் ஆண்டு டிஆர்பி (ஆசிரியர் தேர்வு வாரியம்) மூலம் மாவட்டஅலுவலகத்தில் பதிவு செய்து, வயது மூப்பு அடிப்படை முன்னுரிமையில் இருந்த 6ஆயிரம் ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ளஇடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் மாதம் 2011ம்ஆண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதில், ‘டெட் தேர்வு எழுத வேண்டும், அதில்தேர்ச்சி பெற வேண்டும்’, என நிபந்தனைகள் விதிக்கவில்லை.இதையடுத்து 2012ம் ஆண்டு டிஇடி(ஆசிரியர் தகுதி தேர்வு) எனும் டெட் தேர்வுநடத்தப்பட்டது. டெட் நிபந்தனை எங்களுக்கு பொருந்தாது என பெரும்பாலானோர் தேர்வைபுறக்கணித்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் இதில் 5,400 பேருக்கு பணிவரன்முறைவழங்கப்பட்டது.600 பேருக்கு இதுவரை வரவில்லை. இந்நிலையில் சிறுபான்மையற்ற அரசு உதவிெபறும்பள்ளியை தொடர்ந்து 23.8.2010ம் ஆண்டுக்கு பின் அரசு பள்ளியில் சேர்ந்தஆசிரியர்களுக்கு இறுதி கெடுவாக, வருகின்ற டெட் தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சிபெற வேண்டும் என அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், பட்டதாரி ஆசிரியர்கள்கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் 9,500 ஆசிரியர்கள்பணி நீக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2010-11ம் கல்வியாண்டு மற்றும்அதற்கு பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ேதர்ந்தெடுக்கப்பட்டு பட்டதாரிஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்கள் 23.8.10ம் ஆண்டுக்கு பின் டிஆர்பி சான்றிதழ்சரிபார்ப்பு பணி நடத்திமுடிக்கப்பட்டு, பணி நியமனம் வழங்கப்பட்ட பணிநாடுநர்கள், பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் நியமன ஆணையில் நிபந்தனை ஏதும் தெரிவிக்கப்பட்டிருந்தால், அந்தநிபந்தனையை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்திசெய்யவில்லை என்றால் தமிழ்நாடு அரசு சார்நிலை பணி விதிகள் 26பி மற்றும்28ன்படி நியமன அலுவலரால் நீட்டிக்க அல்லது ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த 5ஆண்டுகளில் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றிக்கொண்டிருந்தால், அவர்களது தகுதிகாண் பருவம் நியமன அலுவலரால் நீட்டிக்க அல்லதுரத்து செய்யப்பட வேண்டும்.எனவே, 5 ஆண்டுகளாக டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், பணியாற்றி கொண்டிருந்தால்அந்த ஆசிரியர்கள் விவரம் உடனடியாக அரசு மற்றும் நகரவை உயர், மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இதுவரை டெட் தேர்வு எழுதாதவர்கள் வருகின்ற டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். இது இறுதி வாய்ப்பாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றதீர்ப்பின்படி, டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 23.8.2010ம் ஆண்டுக்கு பின் சான்றிதழ்சரிபார்ப்பில் கலந்துகொண்டு பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்று, டெட்தேர்வு எழுதாமல் இருந்தால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டெட் தேர்வுஎழுதுமாறு அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் அவர்தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,” கடந்த 5 வருடங்களுக்கு முன் டிஆர்பிமூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தோம். அப்போது, டெட் தேர்வு சம்மந்தமாக ஏதும்கூறவில்லை. ஆர்டிஇ சட்டம் அதன்பின் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் பணி வரன்முறைவழங்கப்பட்டது. தற்போது டெட் தேர்வு எழுத வேண்டும், தேர்ச்சி பெற வேண்டும் எனகூறுவது நியாமல்ல. இதனால், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடுமையாகபாதிக்கப்படுவார்கள். தற்போது சென்னையில் ஒரு ஆசிரியை தற்கொலைக்குமுயன்றுள்ளார். திருப்பூரில் ஒரு ஆசிரியை இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு,மயக்கமடைந்தார். ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். தமிழக அரசுஉடனடியாக கவனம் செலுத்தி, டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்குஅளிக்க வேண்டும்”, என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement