Ad Code

Responsive Advertisement

மின் வாரிய உதவி பொறியாளர் நேர்காணல் திடீர் இடமாற்றம்.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, உதவி பொறியாளர் பணி நியமனத்திற்கான நேர்காணலை, மின் வாரியம், வண்டலுாரில் நடத்த உள்ளது.


தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணலை, சென்னை, கோயம்பேட்டில் உள்ள, விஜய் பார்க் ஓட்டலில், வரும், 13ல் இருந்து, 18 வரை நடத்த திட்டமிட்டது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, நேர்காணல் இடத்தை, மின் வாரியம் மாற்றியுள்ளது.

இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பு: உதவி பொறியாளர் நேர்காணல், சென்னை அடுத்த, வண்டலுார் மிருக காட்சி சாலை அருகில் உள்ள, 'கல்யாண் ஹோம்டெல்' என்ற ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடம், வண்டலுார் மிருக காட்சி சாலை மற்றும் கிரசன்ட் இன்ஜினியரிங் கல்லுாரி அருகே உள்ளது. இது தொடர்பாக விபரங்கள் பெற, 044 - 6628 9999, 74018 15451, 73580 54372, 94458 57197 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement