Ad Code

Responsive Advertisement

அங்கன்வாடி மதிய உணவுக்கு 'ஆதார்' அட்டை அவசியமா?

அங்கன்வாடி மையங்களில், மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு, 'ஆதார்' அட்டை தேவையில்லை' என, விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், ஐ.சி.டி.எஸ்., என்ற, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட பயனாளிகளுக்கு, ஆதார் அட்டை கட்டாயம் என, கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
மேலும்,

  ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, ஐ.சி.டி.எஸ்., திட்டத்தின் கீழ் வழங்கும் சத்துணவுக்கு பதிலாக, வங்கி களில் பணம் போட, அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது; அதற்கு, ஆதார் எண் அவசியம் என்றும் கூறப்பட்டது. அது, தவறான செய்தி என, தெரிய வந்துள்ளது. ஐ.சி.டி.எஸ்., திட்டத்தில், ஆறு மாதம் முதல், 36 மாதங்கள் வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு, கூடுதல் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

 இந்நிலையில், ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறித்து, புகார்கள் வந்தன. அதற்காக, சில நிபந்தனைகளுடன், குறிப்பிட்ட சில மாவட்டங்களில், பரிசோதனை முறையில், பொருட்களுக்கு பதிலாக, பணமாக, வங்கியில் செலுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அது போல், மூன்று முதல், ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, அங்கன்வாடி மையங்களில் சமைக்கப்பட்ட, சூடான உணவு வழங்கும் திட்டம் தொடரும் என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement