Ad Code

Responsive Advertisement

நாளை தமிழக பட்ஜெட்??

தமிழக சட்டப் பேரவையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார்.


இதற்காக சட்டப் பேரவையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். வரும் 23-ஆம் தேதி, வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் உரையாற்றவுள்ளார்.

கடன் சுமை: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதங்கள் அதிகரிக்கும் சூழலில், நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு அளவும் உயரும். இந்த நிதி ஒதுக்கீட்டு உயர்வால், தமிழகத்தின் கடன் சுமை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் சுமையின் அளவு ரூ.2.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதீத கடன் சுமையால் பெரிய அளவிலான புதிய திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபரப்பான அரசியல் சூழல்: அதிமுகவில் இருந்து பிரிந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக ஓர் அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணிக்கு 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. திமுக, ஓ.பி.எஸ். அணியினர் பல முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை, ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் நிறுத்தம், வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு உள்பட பல முக்கிய விஷயங்களை திமுகவைப் போன்றே, ஓ.பி.எஸ். அணியினரும் எழுப்ப முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement