Ad Code

Responsive Advertisement

தமிழில் "செட்' தேர்வு: உயர்நீதிமன்றத்தில் அன்னை தெரசா பல்கலை. தகவல்

மாநில அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்வு (செட்) வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இடம்பெறும் என்று கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.



தூத்துக்குடியைச் சேர்ந்த ஏ.சுடலைமுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தமிழ் வழிக்கல்வியில் எம்.காம்., மற்றும் பி.எட் படித்துள்ளேன். கல்லூரி ஆசிரியர்களுக்கான மாநில தகுதித் தேர்வை (செட்) கடந்த ஆண்டு கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தியது. இத்தேர்வில் நான் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் நடப்பாண்டிற்கான தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் இடம் பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில தகுதித்தேர்வு விதிகளுக்குப் புறம்பானது. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரிவுரையாளர் தகுதித் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படும் என்று அன்னை தெரசா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement