Ad Code

Responsive Advertisement

ஏப்., முதல் டாக்டர்களுக்கு 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு.

தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களுக்கு, வரும் ஏப்., 1 முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவினை கட்டாயமாக்கும் படி, மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


டாக்டர்களின் தாமத வருகை, வருகைப் பதிவேட்டில் போலி கையெழுத்திடுதல் உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி, கடந்தாண்டு 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.இதனை அடிப்படையாக கொண்டு, மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நான்கு மாதங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஜன., 25ல் உத்தரவிட்டது.இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக, வரும் ஏப்., 1 முதல் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை கட்டாயமாக்கும்படி, சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.டீன் ஒருவர் கூறியதாவது: 2012ல் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கொண்டு வந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு திட்டத்தை, டாக்டர் சங்கங்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முடக்கின. இதனால் வாங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்களில் பெரும்பாலானவை வீணாகியது.

தற்போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், டாக்டர் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிக்க தயங்குகின்றனர்.பயோமெட்ரிக் வருகைப் பதிவினை மறுக்கும் டாக்டர்கள் குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement