Ad Code

Responsive Advertisement

தாய் இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவன்

வால்பாறையில், தாய் இறந்த துக்கத்திலும், மகன் பிளஸ் 2தேர்வு எழுதினார்.
கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்தவர், திருச்செல்வம் மனைவி அய்யம்மாள் செல்வி, 38. இவர், 'அம்மா' உணவகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள். கடந்த, 10ம் தேதி வீட்டுக்கு வந்த அய்யம்மாள் செல்வி, குளிர்பானம் என நினைத்து, பாட்டிலில் இருந்த களைக்கொல்லி மருத்தை குடித்தார்.ஆபத்தான நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலை இறந்தார். தற்போது, பிளஸ் 2 தேர்வு நடந்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் அருண், தாய் இறந்த துக்கத்திலும், நேற்று காலை தேர்வு எழுதினார். மாலையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement