Ad Code

Responsive Advertisement

மின்வாரிய பணியிடம் - இடைத்தரகர்களை நம்பாதீங்க: மின் வாரியம் வேண்டுகோள்

நேர்காணல் நடத்தும் அதிகாரிகள் குழுவை, தேர்வர்களே தேர்வு செய்ய உள்ளதால், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என, மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



  தமிழ்நாடு மின் வாரியம், 375 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, நாளை முதல், 18ம் தேதி வரை, நேர்காணல் நடத்துகிறது. சிலர், வேலை வாங்கி தருவதாக கூறி, தேர்வர்களிடம் இருந்து, பல லட்சம் ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த அறிக்கை:நேர்காணலுக்கு, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு நாளும் நேர்காணல் குழுக்களில் இடம்பெற உள்ள நபர்கள் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர்.
அதேபோல, நேர்காணலுக்கு வரும் நபர்களும், நேர்காணல் குழுவை, குலுக்கல் முறையில், தாங்களே, அரங்கில் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேர்காணல் முற்றிலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடக்கும். இடைத்தரகர்கள் கூறுவதை யாரும் நம்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement