Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு விடைக்குறிப்பு தயாரிப்பு தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் யோசனை

பிளஸ் 2 தேர்வில், விடைக் குறிப்புகளை பிழையின்றி தயாரிக்க, தேர்வுத்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து வருகின்றன.
இதில், 20 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

  மொழி பாடங்களுக்கு தேர்வு முடிந்து, முக்கிய பாடங்களுக்கு தேர்வு துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடக்கும் போதே, முந்தைய நாளில் முடிந்த பாடங்களுக்கு, விடை திருத்தம் துவங்கி விடும். இந்த ஆண்டு, அனைத்து தேர்வுகளும் முடிந்த பிறகே, ஏப்., 1 முதல் விடை திருத்தம் துவங்குகிறது.இந்நிலையில், விடைக் குறிப்புகள் தயாரிக்கும் பணி, வரும், 15 முதல் துவங்குகிறது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பொது தேர்வுக்கான விடை திருத்தம் துவங்கும் நாளில், விடைக் குறிப்புகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். அப்போது தான், விடைக் குறிப்பில் இருக்கும் தவறுகள் தெரியவரும். ஆனால், உடனடியாக தவறுகள் திருத்தப்படாது என்பதால், முதலில் திருத்தப்படும் விடைத்தாள்களில், சரியான விடை இருந்தாலும், விடைக் குறிப்பு தவறாக இருப்பதால், அந்த மாணவருக்கு மதிப்பெண் கிடைக்காது.
எனவே, தேர்வை சரியாக எழுதும் மாணவர்களும், அதற்கான மதிப்பெண்ணை பெறாமல் பாதிக்கப்படுவது உண்டு.

சில மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததும், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே, அவர்களுக்கு முறையே சேர வேண்டிய மதிப்பெண் கிடைக்கும்.
எனவே, விடைக்குறிப்பை தயாரித்து, அதை விடைத்தாள் திருத்தம் துவங்கும் முன்னரே சரிபார்த்தால், எந்த மாணவரும் பாதிக்கப்பட மாட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement