
புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை.
அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள் தான், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்நிலையில், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, உதவியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சார் - பதிவாளர் அலுவலகங்களில், உதவியாளர்களாக உள்ளவர்களில், பதவி உயர்வுக்கு தகுதி யானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருந்து, 96 பேர் பதவி உயர்த்தப்பட்டு, சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில், அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை