

மனப்பூர்வமாக சொல்கிறேன்
வாழ்க மாணவர்களே..
பெருமைப் படுகிறோம்...
நல்ல உணர்வுள்ள சமூகத்தை உருவாக்கியுள்ளோம்..!
தனக்கென இல்லாது சமூகத்திற்காகவும்,தமிழனின் பாரம்பரியத்தை காக்கவும் ஒன்றினைந்து
போராடும் தமிழினத்தின் மாண்புமிகு மாணவர்கள் அனைவருக்கும் எனது உணர்வான வாழ்த்துக்கள்..!
இயலாத எங்களின் இரும்பான உணர்ச்சிமிக்க ஆசீர்வாதங்கள்..!
எனக்கு நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற வழக்கங்களை பின் பற்றிட எவ்வித சிக்கல்களும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்,நாங்கள் போராட வேண்டிய அவசியம் இல்லாத அரசுகளை தேர்ந்தெடுத்து சிக்கலில்லாத வாழ்க்கைமுறைக்கு பழக்கப்பட்டு அனைவரையும் மதித்து,நம்பி வாழ்ந்ததன் விளைவு இன்று நாம் நம் பாரம்பரியங்களை இழக்க நேரிடும் போல் உள்ளது..,பிறப்பால் உணர்வால் தமிழனாய் தனித்தனியாய் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் இதோ எம்குல மாணவ சமுதாயம் வந்துவிட்டது...! "நாங்கள் இருக்கோம்"என எங்களுக்குள்ளும் நம்பிக்கையை இழக்கவிடாமல் தாங்கிப்பிடித்துகொண்டிருக்கிறாய்..,நன்றி
வெற்றியோ தோல்வியோ இந்த ஒற்றுமை ஒன்றுபோதும் எம்குல மாணவன் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி தமிழ்சமூகத்தை அதன் பாரம்பரியத்தை வீழாமல் காப்பான் என்ற நம்பிக்கை என்னுள் புதைக்கப்பட்டுவிட்டது.நல்ல சக்தி படைத்த தமிழ்மாணவ சமூகத்தை பெற்றுள்ள பெருமிதத்துடன்....
- மருது பாண்டியன்



0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை