Ad Code

Responsive Advertisement

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

திடீர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழக அரசுத் துறைகளில், துணை கலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் - 1' பதவிகளில், 85 இடங்கள் காலியாக உள்ளன.

  இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல் தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.

ஆனால், கடந்த வாரம், வங்க கடலில் உருவான, 'நடா' புயலால் அறிவித்த விடுமுறை; செல்லா நோட்டு அறிவிப்பால் பணத் தட்டுப்பாடு மற்றும் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவால் விடுமுறை போன்ற காரணங்களால், விண்ணப்பிக்க, தேர்வர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. இன்று ஒரு நாளில், விண்ணப்பம் பதிவு செய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement