2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.
பாடத்திட்டம்
பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும்.
இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும்.
1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.
'நீட்' தேர்வின் முக்கியத்துவம்:
NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும்.
'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள்
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.
தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.
தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை