Ad Code

Responsive Advertisement

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: ஜனவரிக்கு ஒத்தி வைப்பு.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில், உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்தும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி ஜனவரிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement