தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை கோரியதை, தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (நீதித்துறை) இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் ஒன்று முதல் 10 ம் வகுப்புவரை நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை ஒழுங்குபடுத்தி, மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதிவாளர் மனு செய்திருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.நீதிபதிகள்: தமிழக கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வி மற்றும் துவக்கக் கல்வி இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லாலை நியமிக்கிறோம். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை