Ad Code

Responsive Advertisement

அரசு பணியில் சேரும்போது சொத்து விபரம் வழங்க உத்தரவு

 'அரசு பணிகளில் சேருவோர், தங்கள் முழு சொத்து விபரங்களை அளிக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.கேரள மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்க்கும் அரசு ஊழியர்களை கண்டறியும் வகையில், அரசு பணியில் புதிதாக சேருவோர், தங்கள் சொத்து விபரங்களை வழங்க வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோர் அனைவரும், அவர்களது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். அவர்களது பணிப் பதிவேட்டின் ஒரு பகுதியில் அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களை எழுத வேண்டும். இவ்வாறு செய்வதால், பணியில் சேர்ந்த பின், ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதை எளிதில் கண்டுபிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement