Ad Code

Responsive Advertisement

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என மத்தியசுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.



தில்லியில் 7-வது தேசிய உடல் உறுப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா " மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமே மட்டுமே நடைபெறும் "என்று தெரிவித்துள்ளார்.


மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உடனடியாக அமல்படுத்த முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து இந்த தேர்வை ஒராண்டுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement