Ad Code

Responsive Advertisement

TNTET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET - லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சரிடம் மனு.

 23/08/2010  க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையான கல்வித் தகுதிகளுடன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் TET நிபந்தனைகளை கூறிபணியை தொடர அனுமதிக்கப்பட்டனர்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில பணப் பயன் மறுக்கப்பட்ட நிலையில்  பணியில் உள்ளஇந்த ஆசிரியர்கள் பணி நிபந்தனை காலம் வரும் நவம்பர் 15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.



  ஆசிரியர் தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும்பட்சத்தில்  சுமார் மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழகஅரசால் பாதுகாக்கப்படும்.இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகு தமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின் மாநிலம் தழுவியபிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்து  உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும்அவர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்மிகவும் பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர். மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டு செல்லப் பட்டுவிரைவில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்ல தீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பிரதிநிதிகள்தெரிவித்தனர்.

Post a Comment

2 Comments

  1. எங்களுக்கு அம்மாதான் கண்கண்ட தெய்வம். விலக்கு அளித்தால் அம்மாதான் எங்கள் குலசாமி ஆகவே தயவுகூர்ந்து அம்மா விலக்கு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement