தமிழகத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்போவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி,இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் டெல்லியில் இளைஞர்நலத்துறை அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் கலந்து கொண்டார்.
அங்கு நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘அடுத்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக நடக்கும்.
அதற்கு தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இப்போதே பயிற்சி அளிக்கப்போகிறோம்’ என்று கூறியுள்ளார். ஆனால் நீட் தேர்வை சட்டரீதியாக தமிழக அரசு எதிர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கல்வியாளர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. அதனால் உடனடியாக தமிழக அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகரான பாடத்திட்டத்தையும் அமல்படுத்த முடியாது.இதனால் அடுத்த ஆண்டில் தமிழகத்தில் இருந்து டாக்டருக்கு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஐஐடி போல் பிறமாநில மாணவர்கள் இங்கு வந்து படிக்க நேரிடும்’ என்றார். அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை