Ad Code

Responsive Advertisement

எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுக்கலாம்

மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களிலும், ஒரு வாரத்திற்கு, கட்டணமின்றி பணம் எடுக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, நவ., 9, 10ம் தேதிகளில், தானியங்கி பண சேவை மையங்களான, ஏ.டி.எம்.,கள் செயல்படவில்லை. நேற்று முதல், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஆனாலும், பல வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் செயல்படவில்லை.இந்நிலையில், 'மற்ற வங்கி ஏ.டி.எம்.,களிலும், கூடுதல் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். வரும், 18 வரை இந்த சலுகை உண்டு' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

ஏ.டி.எம்.,களில், 50, 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் வைக்கப்படும். நவ., 18 வரை, ஒரு நாளைக்கு, ஒரு வங்கி கணக்கு அட்டை மூலம், 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். வாடிக்கையாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள, எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில், ஐந்து தடவைக்கு மேலும் பணம் எடுக்கலாம். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட, ஐந்து தடவை என்ற கட்டுப்பாடு, நவ., 18 வரை பொருந்தாது. அதற்கு, எந்த கட்டணமும், வங்கி தரப்பில் வசூலிக்கப்பட மாட்டாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement