அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில், தகவல் பதிவேடு தாமதமாக வழங்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கு இரட்டை வேலைபளு ஏற்பட்டு, கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இலவச கல்வி உரிமை சட்டத்தை, முழுமையாக அமல்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியது.
மாநில அளவில், திட்ட ஒருங்கிணைப்பாளராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளார். திட்டத்திற்கு, மத்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி கிடைக்கிறது. இந்நிதியை செலவு செய்ய, பல திட்டங்களை அதிகாரிகள், பெயரளவில் செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'மாணவர்களை படிக்க வைக்க துவங்கிய திட்டம், தற்போது, மாணவர் நலனை புறக்கணிப்பதாக, மாறி விட்டது' என, ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தொடர் மதிப்பீட்டு முறையான, சி.சி.இ., அமலில் உள்ளது. இதற்கு, ஆண்டின் துவக்கத்தில், மாணவர்களின் விபரங்களுடன் பதிவேடு துவக்க வேண்டும். பருவத்தேர்வுகள் முடிந்ததும், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, அதில் பதிய வேண்டும்.
பள்ளிகள் இந்த பதிவேட்டை தாமாகவே தயாரித்து, மாணவர்களின் விபரங்களை எழுதி வைத்துள்ளன. கல்வி ஆண்டு துவங்கி, ஐந்து மாதங்களுக்கு பின், புதிதாக தகவல் பதிவேடு புத்தகத்தை கொடுத்து, அதில், மாணவர் விபரங்களை பதிவு செய்ய, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
'மறுபடியும் முதலில் இருந்தா...' என, ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.தொடக்கப் பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர் மட்டும் இருக்கும் நிலையில், அவர்கள் பாடம் நடத்துவதை விட்டு, தினமும் பதிவேடு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதால், வகுப்புகளில் பாடம் நடத்தும் நேரம் குறைந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை