தன் வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, ஒரு இந்து மகன் விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர், விவகாரத்து தொடர்பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில் தீர்ப்பை எழுதிய நீதிபதி அனில் ஆர் தவே கூறியிருப்பதாவது: ‘பெற்றோரால் வளர்த்து, கல்வி புகட்டி வளர்க்கப்படும் மகனுக்கு, வயதான, வருமானம் இல்லாத அல்லது குறைவான வருமானமே உடைய தனது பெற்றோரை பராமரிக்கும் தார்மீக பொறுப்பம், சட்டப்பூர்வ கடமையும் இருக்கிறது.
மேற்கத்திய கலாச்சாரத்தில் தான் திருமணம் ஆனதும் அல்லது வயது வந்ததும் மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார். ஆனால் இந்தியாவில் மக்கள் பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை. இந்து சமூகத்தில் பிறந்த ஆண், அவரது பெற்றோரை பிரித்து வாழ்வது கலாச்சாரத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது.
பணம் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கும் பெற்றோர், தனது மகனை சார்ந்து வாழும் சூழலில் அவர்களை பிரிந்து செல்வது சரியான செயல் இல்லை. எனவே சரியான காரணமின்றி பெற்றோரிடமிருந்து கணவனை பிரிக்க மனைவி நினைப்பது கொடுமையாகவே கருதப்படும் அதுபோன்ற சூழலில் மனைவியை கணவன் விவகாரத்து செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை