Ad Code

Responsive Advertisement

'தினமலர் -- பட்டம்' தனி இதழ் வெளியீட்டு விழா

 'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' தனி இதழ் வெளியீட்டு விழா, சென்னை சேலையூர் சீயோன் பள்ளியில் நேற்று நடந்தது. 'தினமலர் - பட்டம்' இதழ் தினசரியாக, திங்கள் முதல் வெள்ளி வரை வெளியாகிறது. 

இதன் வெளியீட்டு விழா, சேலையூர், சீயோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், நேற்று நடந்தது. மாணவர்கள் அனைவருக்கும், 'பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.

பள்ளியின் தாளாளர் விஜயன் பேசியதாவது: மாணவர் ஒவ்வொருவரிடமும், தனித்திறமைகள் புதைந்து கிடக்கின்றன. அதை வெளிக் கொண்டு வர, செய்தித்தாள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. பள்ளி படிப்புடன், 50 சதவீதம் பொது அறிவு இருந்தால் தான், ஐ.ஏ.எஸ்., ஆக முடியும். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை, நாளிதழ்கள் தான், நமக்குச் சொல்கின்றன. புது முயற்சியாக, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் பதிப்பு பட்டம் என்ற தனி இதழை, 'தினமலர்' நாளிதழ் கொண்டு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிஅளிக்கிறது. மூளைக்கு வேலை கொடுக்கும் இதழாக, பட்டம் இருப்பதை உணருகிறேன். இது, மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement