Ad Code

Responsive Advertisement

ஒரே நாளில் இரு போட்டித்தேர்வுகள்

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வும், அகில இந்திய வங்கித் தேர்வும் அக்.,22ல், ஒரே நாளில் நடக்கவுள்ளதால் இரண்டிற்கும் விண்ணப்பித்து உள்ள தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அரசு பொறியியல் கல்லுாரிகளில் சீனியர் விரிவுரையாளர், விரிவு ரையாளர் மற்றும் ஜூனியர் விரிவுரையாளர் என 222 காலி பணியிடங்களுக்கு அக்.,22ல் மதுரை உட்பட 9 மாவட்டங்களில் டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடக்கிறது.

முன்னர் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு அடிப்படையில், அக்.,21ல் ஓட்டு எண்ணிக்கை நடப்பதாக இருந்தது. எண்ணிக்கை முடிந்த மறுநாளே (அக்.,22) பள்ளி, கல்லுாரி மையங்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்தால் ஒன்பது மாவட்டங்களில் டி.ஆர்.பி., தேர்வும் நடக்குமா என சர்ச்சை எழுந்தது. 

இப்பிரச்னை குறித்து டி.ஆர்.பி., ஆலோசித்து வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், அக்.,22 தேர்வு சிக்கலுக்கும் தீர்வு கிடைத்தது. இந்நிலையில் மத்திய அரசின் ஐ.பி.பி.எஸ்., (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அன்ட் பெர்சனல் செலக்ஷன்) வங்கி தேர்வும் அக்.,22ல் நடக்கிறது தெரிய வந்துள்ளது.இதனால் மதுரையில் பல தேர்வர்களுக்கு ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுகளுக்கும் 'ஹால்டிக்கெட்'டுகள் வந்துள்ளல் எந்த தேர்வை எழுதுவது என குழப்பத்தில் உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement