Ad Code

Responsive Advertisement

சி.இ.ஓ., பதவி உயர்வில் சிக்கல்

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி மாவட்ட ஆய்வாளர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்படும். வழக்கமான பணிகளுக்கு ஒருவர், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., பணிகளுக்கு ஒருவர் என, மாவட்ட அளவில், இரண்டு சி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்படுவர். 

ஓராண்டாக, எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கான, சி.இ.ஓ., பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, 32 இடங்கள் காலியாக உள்ளது; இதனால், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, தமிழக மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் சங்கத் தலைவர் சிவா.தமிழ்மணி கூறுகையில், ''எஸ்.எஸ்.ஏ., மற்றும் இலவச நலத்திட்ட பணிகளை இணைத்து மேற்பார்வையிடும் வகையில், புதிய சி.இ.ஓ.,க்கள் நியமிக்க வேண்டும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement