Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் கேமரா : பெண்கள் சங்கம் மனு

'பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சங்கத் தலை வர், கலைச்செல்வி கொடுத்த மனு: பல கல்லுாரி மற்றும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு எதிராக, வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

மாணவ, மாணவியர் கொலை, பாலியல் தொந்தரவு, தற்கொலை போன்ற அவலங்கள் நடக்கின்றன. இவற்றை தடுக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி யில், மாணவ, மாணவியரை, கழிப்பிடத்தை துாய்மைப்படுத்த கட்டாயப்படுத்திய, தலைமை ஆசிரியை மற்றும் துணைத் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement