அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆசிரியர்களுக்கு, பொம்மலாட்டம் போன்ற நடனப் பயிற்சிகள் தரப்படுவதால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியை வலுப்படுத்த வேண்டிய, எஸ்.எஸ்.ஏ., என்ற, மாநில திட்ட அமைப்பு, மத்திய அரசிடம் பெறும், பல கோடி ரூபாய் நிதியில், ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகளை அளிக்கிறது.
'மாணவர்களுக்கு உதவாத, இது போன்ற ஆட்டம் காட்டும் பயிற்சி களை வைத்தே, பல ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை' என, தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., பாடம் நடத்துகிறது. பாடம் கற்க வேண்டிய மாணவர்களோ, வகுப்புகளில், ஆசிரியர்கள் இன்றி தடுமாறுகின்றனர் என, கல்வியாளர்கள் குமுறுகின்றனர்.
இது குறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், 'பாடங்களை முறையாக நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின், இது போன்ற நடனங்களை கற்று தரலாம்.
'எஸ்.எஸ்.ஏ., நடத்தும் மதிப்பீட்டு தேர்வில், மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். அதன் பின்னும், இது போன்ற பயிற்சிகள் கைகொடுக்க வில்லை என்பதை, அவர்கள் உணரவில்லை' என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை