மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ) மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
வரும் ஜன., 2017 முதல் இணையதளம் மூலம் கற்பிக்கும் திட்டமான 'மூக்' செயல்பாட்டுக்கு வரும். அதன் மூலம், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.இணையதள கல்வியை எந்தவித கட்டணமும் இன்றி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சான்றிதழ் பெற உரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
அடுத்த சில மாதங்களில், கலாசார மேம்பாடு, ஆசிரியர் கல்வி போன்றவற்றுக்காக நான்கு தொலைக்காட்சி சேனல்கள் துவங்கப்பட உள்ளன. அவற்றில் 'இக்னோ' பல்கலை பெரும்பங்கு வகிக்கும். பல்கலை சார்பில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது.புதிய கல்வி கொள்கை, பல்கலையின் பாடத்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாகவே உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு கட்டணமின்றி கல்வி அளிக்கப்படுகிறது. அவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
பல்கலையின் மண்டல சேவை பிரிவு இயக்குனர் வேணுகோபால் ரெட்டி, மண்டல இயக்குனர் மோகனன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை