Ad Code

Responsive Advertisement

'டியூஷன்' எடுக்க கே.வி., ஆசிரியர்களுக்கு தடை

'சிறப்பு வகுப்புகளான, 'டியூஷன்' நடத்தும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, கே.வி., எனப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களில், பெரும்பாலானோர், பள்ளி பணி நேரம் போக, மற்ற நேரங்களில், டியூஷன் எடுக்கின்றனர். இது போன்று, கே.வி., பள்ளி ஆசிரியர்கள் பலர், டியூஷன் எடுப்பதாகவும், மாணவர்களை, டியூஷனுக்கு வர கட்டாயப்படுத்துவதாகவும், கே.வி., சங்கதன் என்ற தலைமையகத்திற்கு புகார்கள் சென்றன. விசாரணையில், ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது தெரிய வந்ததால், கே.வி., பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைமையகம், எச்சரிக்கை கடிதத்தை வழங்கி உள்ளது.

கடித விபரம்:டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, கூடுதலாக பாடங்கள் நடத்துவது; பாடத்தின் முக்கிய அம்சங்களை, சிறப்பாக தயாரித்து வழங்குவது; தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வழங்குவது; செய்முறை தேர்வில், அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற சலுகைகளை அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கே.வி., ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது; மீறுவோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, பெற்றோர் புகார் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement