Ad Code

Responsive Advertisement

'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.நாடு முழுவதும், பல்கலை மற்றும் கல்லுாரி களில் பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மட்டும் பேராசிரியராக, தமிழக அரசு நடத்தும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழகத்தில், தெரசா பல்கலை, பிப்ரவரியில் இத்தேர்வை நடத்தியது. எட்டு மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.

உயர் கல்வி துறை:செட் தேர்வுக்கு பின், ஜூலையில் ஒரு நெட் தேர்வு முடிந்து, அடுத்த தேர்வு, ஜனவரியில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்., 17ல் துவங்கியது. 'செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர், நெட் தேர்வு எழுதுவர். எனவே, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' என, நெட், செட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்; நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில், '10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது' என, நமது நாளிதழில், அக்., 20ல், செய்தி வெளியானது.
தெரசா பல்கலை :இதைத் தொடர்ந்து, இன்று காலை, 10:00 மணிக்கு, செட் தேர்வு முடிவு வெளியாகும் என, தெரசா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வு முடிவை, http://www.motherteresawomenuniv.ac.in, www.setresult2016.in என்ற இணையதளங்களில் அறியலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement