விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.,டி.,யில், ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டி.ஆர்.பி., சார்பில், நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது.
மதுரை தேர்வு மையம் ஒன்றில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியை சேர்ந்த பட்டதாரி பெண், மொபைல் போனை தேர்வு அறைக்குள் கொண்டு வந்து, வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பி உள்ளார். பின், பதில் வந்துள்ளதா என, பார்க்க முயன்ற போது, அறை கண்காணிப்பாளரிடம் சிக்கினார்.
இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், அந்த பெண்ணிடம் விசாரித்து, போலீசில் புகார் அளித்தனர்.
ஆசிரியர் பதவிக்கான தேர்வைக்கூட, பள்ளி கல்வித்துறையால், பிரச்னையின்றி நடத்த முடியவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அலட்சியம்
'ஆசிரியர்களை நியமிக்கும், டி.ஆர்.பி.,யில், வெளிப்படை தன்மை இல்லை; நியமனங்களில் நேர்மையான விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை' என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், 'டி.ஆர்.பி., அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், வினாத்தாள் வெளியான மோசமான நிலை ஏற்பட்டுள்ளது' என, பட்டதாரிகளும், ஆசிரியர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை