Ad Code

Responsive Advertisement

பி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்

தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, 2014 - 15 வரை, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சார்பில், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

பி.எட்., படிப்புக்கு, 37 ஆயிரத்து, 500 ரூபாய்; பி.ஏ., - பி.எட்., நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு, 22 ஆயிரத்து, 500 ரூபாய்; பி.எஸ்சி., - பி.எட்., நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் எம்.எட்., படிப்புக்கு, 38 ஆயிரம் ரூபாய் என, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இது, ஒரு ஆண்டுக்கான கட்டணம்.

கடந்த, 2015க்கு முன் வரை, பி.எட்., படிப்புக்கு, 41 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம் இருந்தது. அப்போது, பி.எட்., படிப்பு ஓராண்டாக இருந்ததால், இந்த கட்டணத்தில் படிப்பை முடித்து விடலாம். தற்போது, பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.

அதனால், 2015 - 16ல், பி.எட்., படிப்பில் சேர்ந்தோர், முதலாம் ஆண்டில், 41 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்தி உள்ளனர்; இந்த ஆண்டுக்கு, 37 ஆயிரத்து, 500 ரூபாய் என, இரண்டு ஆண்டு படிப்புக்கு, 79 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும். இந்த ஆண்டு, பி.எட்., படிப்பில் சேருபவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 75 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement