
தங்களது பணியின் மீது ஆர்வமும் கூடுதலாக தங்களது மாணவர்களின் மீது அக்கறையும் கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்தப்பணத்தை செலவுசெய்து, விடுமுறை நாட்களில் கூட தங்களது கற்பித்தலுக்காகவும் மாணவர்களின் கற்றலுக்காகவும் ஏதேனும் ஒரு விசயத்தை சக ஆசிரியர்களுக்கு கொடுக்கவோ பெற்றுக்கொள்ளவோ முடியும்...


இடையில் தங்களது திறன்சார் விசயங்களையும் இன்னும் பட்டைதீட்டிக் கொள்ளமுடியும் என்னும் நம்பிக்கையோடு ஒன்றுபட்டு நாங்கள் நினைத்தால் எதையும் சாதிப்போம் என நம்பிக்கை உடையவர்களின் தளமாக உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாநில அளவில் சங்கமிக்கும் இரண்டாவது களமாக கல்வியாளர்கள் சங்கமத்தின் ஆசிரியர் திருவிழா வரும் முதல்பருவ விடுமுறையின் கடைசி இரண்டு நாட்களான அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் கரூர் சேரன் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது...

இது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான
புதிய உத்திகளுக்கான பயிலரங்கு
கலைப்பண்பாட்டு விழா
விளையாட்டு விழா
விருதுகள் வழங்கும் விழா
இவ்விழாவில் கலந்துகொள்ள
கூடுதல் காவல்துறை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS
அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்
முனைவர் சொ.சுப்பையா
EFI நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான
அருண்கிருஷ்ணமூர்த்தி
ரோட்டரி இந்தியாவின் இயக்குநர்
Rtn.C.பாஸ்கர்
ரோட்டரி இந்தியாவின் தேசிய எழுத்தறிவுக்குழு உறுப்பினர்
Rtn.PDG.சாம்பாபு
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி
முனைவர். R.ராஜ்குமார்
SCERT உதவிப்பேராசிரியர் R.ஆசிர்ஜுலியஸ்
புதிய தலைமுறை உதவி ஆசிரியர்
இவள்பாரதி
சிறார் எழுத்தாளர் விழியன்
கனவு ஆசிரியர் இயக்குநர்
N.தாமரைக் கண்ணன்
கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட DIET முதல்வர்கள்
கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
வாருங்கள் உங்கள் வருகையும் இவ்விழாவை இன்னும் சிறப்புக்குரியதாக்கலாம்....
கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக உங்கள் வரவையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்...
வருங்கால சமுதாயம் வளமானதாக மாற்றுவதில் நமது பங்களிப்பை உறுதி செய்வோம்...
சி.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
9994119002
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை