Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், நேற்று அமைச்சரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:

தமிழக மாணவர்கள், உயர்கல்வியில் அனைத்து வாய்ப்புகளையும் பெற, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும். அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும், வகுப்புகள் முறையாக நடக்கிறதா என்பதை, தனி அதிகாரிகள்நியமித்து, கண்காணிக்க வேண்டும். அரசு நலத்திட்ட பணிகளில், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன. எனவே, 10 பள்ளிகளுக்கு, ஒரு தொடர்பு அலுவலர் நியமித்து, நலத் திட்ட பணிகளை ஒப்படைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 4,250 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி வசதி இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, வை - பை வசதியுடன் கூடிய கணினி மற்றும் இணையதள வகுப்புகள் துவங்க வேண்டும். அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்பட வைப்பதுடன், வருங்காலத்தில் புதிதாகதனியார் பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement