அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன. தமிழகத்தில், 80 அரசு கல்லுாரிகளும், 162 அரசு உதவிபெறும் கல்லுாரிகளும், 1,178 சுயநிதி கல்லுாரிகளும் உள்ளன. இவற்றில், இரண்டு லட்சம் பேர் படிக்கின்றனர்.
இதுகுறித்து, 'நெட், செட்' சங்க தலைவர் தங்கமுனியாண்டி கூறியதாவது: ஒவ்வொரு கல்லுாரியும், அந்தந்த மாவட்டங்களில் அறிவிப்பு செய்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரை, பேராசிரியர் பதவியில் நியமிக்க வேண்டும்.பல லட்சம் பேராசிரியர்கள், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்; அவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில், பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை