Ad Code

Responsive Advertisement

காவிரி பந்த் - விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை 'நோட்டீஸ்'

அரசின் அனுமதி பெறாமல், பள்ளிகளுக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த, தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று நடந்த முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, சில தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். அதனால், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாகை போன்ற சில மாவட்டங்களில், தனியார் நர்சரி பள்ளிகள் செயல்படவில்லை.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற முக்கிய மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நடந்ததால், மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின. இந்நிலையில், தன்னிச்சையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், சங்கத்தினருக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement