Ad Code

Responsive Advertisement

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அழைப்பு.

யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகையுடன் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2016ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவர் / மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் எண். 163/1, பி.எஸ். குமாராசாமி ராஜா சாலை, சென்னை – 28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலை நாட்களில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு *தமிழ்நாட்டைச் சார்ந்த மொத்தம் 225 (SC-92, SC(A)-18, ST-03, MBC-40, BC-54, BC(M)-07, DA-07 மற்றும் OC-04)மாணக்கர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.* இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ / மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். *பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000/- உதவித் தொகை தமிழக அரசால் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.*
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய *முகவரி :*
*முதல்வர் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை – 28. தொலைபேசி எண் : 044 / 24261475

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement