Ad Code

Responsive Advertisement

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம்  11.09.2016 அன்று மதுரை மாவட்டம் மேலூர் நகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் நிறுவனத் தலைவர் பாவலர் திரு.குகானந்தம் அவர்கள் தலைமை ஏற்றார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்கள். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து நெடுநேரம் விவாதிக்கப்பட்டது. 

இறுதியாக நிறுவனத் தலைவர் பாவலர் திரு.குகானந்தம், தலைமை நிலைய பொறுப்பாளர்கள் திரு.மோகன், திரு.லட்சுமணன்  திரு. ஜான் மற்றும்  மாவட்ட நிர்வாகிகள் ஏகமனதாக புதிய நிர்வாகிகளை தேர்தெடுத்தனர். அதன்படி 

மாநிலப் பொதுசெயலாளர் திரு.பெ.கிருஷ்ணமூர்த்தி., M.A.,B.Ed அவர்கள்  ( வேலூர் மாவட்டம் )

மாநில தலைவர் திரு.பெ.பரமசாமி M.A.,M.Ed., அவர்கள் (தேனி மாவட்டம் )

மாநில பொருளாளர் திரு.சு.சீனிவாசன்., M.Sc., B.Ed அவர்கள்  (தூத்துக்குடி மாவட்டம்





இறுதியில்  நன்றி கூறிய திரு.லட்சுமணன் அவர்கள், பேரவையை வளர்க்க புதிய நிர்வாகிகள் பாடுபடவேண்டும் எனவும், தலைமை நிலைய பொறுப்பாளர்களின் வழிகாட்டுதல்கள், ஒத்துழைப்பு  நிர்வாகிகளுக்கு முழுமையாக இருக்கும் என கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement