Ad Code

Responsive Advertisement

பணிமாறுதல் கேட்டு ஆசிரியை தீக்குளிக்க முயற்சி

வேலூர் மாவட்டம், கான்குப்பத்தை சேர்ந்தவர் மிஸ்லா (30). இவர், வேலூரில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் இளநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பணி மாறுதல் கேட்டு வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்ைல. 


இதையடுத்து மிஸ்லா நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது அதிகாரிகள் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மிஸ்லா ஏற்கனவே தனது பையில் தயாராக எடுத்து வந்த 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து அலுவலகம் எதிரே தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியையை மீட்டனர். 

மேலும் இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் ஆசிரியை மிஸ்லாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.தமிழக முதல்வர் செல்லும் பாதையில் உள்ள அரசு அலுவலத்தில் இளநிலை ஆசிரியை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement