மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, அந்த மாணவி ஆசிரியரின் கையை தட்டி விட்டு ஓடி வந்துள்ளார்.அதன் பின்னர் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற அந்த மாணவி அழுது கொண்டே இருந்துள்ளார். இதை பார்த்து சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது சம்பவம் பற்றி மாணவி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜெயபிரகாஷிடம் விசாரணை நடத்தினர்.
அதில், ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது நிரூபணமானது. இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயபிரகாஷை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் மற்றும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பள்ளி எதிரே திரண்டு, கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் என திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் ஜாபர்கான் பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவிகள் கூறுகையில், ‘‘நாங்கள் இந்த பள்ளியில் தான் 5ம் வகுப்பு முதல் படித்தோம்.
* மாணவர்களின் வளர்ச்சிக்காக அவர் கடுமையாக உழைப்பவர். 13 ஆண்டுகளாக அவர் இந்த பள்ளில் பணியாற்றி வருகிறார்.
* அவர் மீது உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை